Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை…. பெரியார் சிலை முன்பு சமூக நீதி நாள் உறுதிமொழி….

தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் திராவிட இயக்கங்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முன்னதாக அவர்கள் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு கேணிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட துணை தலைவர் ரஷித் கான், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் பெரியாரின் உருவச்சிலை முன்பு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!