Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகப் பணி.. 2 ஆதீனங்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு நவம்பர் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி பூர்வாங்க பூஜை யுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காவிரியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மகாபூரணாகுதி, வேதபாராயணம் திருமுறை பாராயணம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!