Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுத்தை நடமாட்டம்…. மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை….

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாடுவதையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கார் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலீ நகராட்சி தொடக்கப்பள்ளி. அக்ளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி மறையூர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய பள்ளிகளுக்கு நாளை (05.04.2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலி பிடிப்பதற்கு வனத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை ஆகிய துறைகளின் மூலம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இச்சிறுத்தை புலி பிடிக்கப்படும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஆதலால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!