Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மற்றும் காவல்துறையினர் ஆலயத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் உள்ளே சென்று வெளியேறும் பாதைகள் அமைப்பது தொடர்பாகவும் ராஜகோபுரம் மேலே செல்லும் வழிகளில் பாதுகாப்பு போடுவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்று கும்பாபிஷேக பணிகள் குறித்து கலந்துரையாடினர். இந்த ஆய்வில் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!