சிக்கன், பர்கர் போன்ற உணவுகளுக்கு சைடு டிஸ்சாக பயன்படுத்தப்படுவது மையோனைஸ். பச்சை முட்டையில் இருந்து இதனை தயாரிக்கிறார்கள். பச்சை முட்டையால் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
