Skip to content

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பெயிண்டர் தற்கொலை- திருச்சி க்ரைம

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( 69 ) என்ற மூதாட்டி வீட்டில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு வேலை செய்து வரும் அவருக்கு 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்ளார்.சுபலட்சுமியின் உறவினர் வயலூர் சாலை சேர்ந்த சிவக்கலா (51). இவர் அந்த 25 வயது பெண்ணை வயலூர் முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு அவரை அவரது உறவினரான பாலசுப்பிரமணியன் பாலியல் ரீதியாக சீண்டி உள்ளார். அதோடு சுபலட்சுமி வீட்டில் சிவ லோகேஷ் என்பவரும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியன், சுபலட்சுமி, மற்றும் சிவகலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சிவ லோகேஷை தேடி வருகின்றனர்.

பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் வடிவேலன் (30). பைனான்ஸ் நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தன் உறவினர் வீட்டிற்கு சென்றார். மீண்டும் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள் பீரோவில் இருந்த 3 செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது திருடு போன செல்போன்களின் மதிப்பு ரூபாய் 30,000 என கூறப்படுகிறது இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த ஜான் பாஸ்கோ (35) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை .. போலீஸ் விசாரணை

திருச்சி அரியமங்கலம் கோலக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29)., பெயிண்டர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் மது குடித்துவிட்டு அடிக்கடி தன் தாய் அன்ன காமுவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மணிகண்டன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!