ஓசூர் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான 6 கிலோ மெத்தம்பெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் இருந்து பழனி சென்ற பேருந்தில் சோதனை நடத்தியபோது போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் மும்பையில் இருந்து பெங்களூரு வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
