Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 58.99 அடி. அணைக்கு வினாடிக்கு 299 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,755 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 23.939 டிஎம்சி தண்ணீர் உள்ளது.  கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. வெண்ணாற்றில் வினாடிக்கு5,201 கனஅடியும், கொள்ளிடத்தில் 712 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,310 கனஅடியும் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் குறுவைக்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், கர்நாடகத்தில் இருந்து மேட்டூருக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!