தமிழக அமைச்சரவைப் பதவியேற்பு விழாவிற்கு வந்த அமைச்சர் கீர்த்தனா, வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் பதவியேற்க முடியாமல் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்கவிருந்த கீர்த்தனா, இன்று அதற்கான விழாவிற்கு வந்திருந்தார். எனினும், முறைப்படி அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான ‘வெற்றிச் சான்றிதழை’உடன் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ ஒருவர் பதவியேற்கும்போது, தேர்தல் ஆணையம் வழங்கிய வெற்றிச் சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமான விதியாகும். அந்தச் சான்றிதழை முதலில் சமர்ப்பித்த பின்னரே ஒருவரால் பதவியேற்க இயலும் என்பது நடைமுறை வழக்கம்.
இதன் காரணமாக, அவருக்குப் பதவியேற்க அனுமதி மறுக்கப்பட்டது. சான்றிதழ் இல்லாத காரணத்தால் பதவியேற்க வந்தவர், பதவியேற்காமலேயே விழாவிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் உருவானது.
