Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் கீர்த்தனா அதிரடி: “முதலீடுகள் ஆந்திரா சென்றதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலடி

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்ததார். அதன்பின் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் தக்க பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னாள் ஆட்சியாளர்கள் அதிகாரிகளைத் தங்களின் கையில் வைத்துக்கொண்டு, தவெக ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த முயல்வதாகவும், முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட பல கட்ட செயலாக்கத் தாமதங்கள் காரணமாகவே முதலீட்டாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறினர் என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்னும் தன்னைத் தொழில்துறை அமைச்சராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும், தவெக அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும் அமைச்சர் கீர்த்தனா சாடினார்.

error: Content is protected !!