Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிர்மல்குமார் இனி ”கலெக்சன் குமார்”-புதிய பெயர் வைத்தார் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு பிரச்னைகளை சமாளிக்க தமிழக அரசு 1 யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்க ஒபந்தம் போட்டுயிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுெதொடர்பாக பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலாயத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களை சந்திந்தார் . அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது…..

திமுக ஆட்சி காலத்தில் சொந்த உற்பத்தியின் அடிப்படையிலேயே மின்தேவைகளை அரசு கவனித்து சமாளித்து வந்தது. ஆனால் தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து மின்சாரம் துறைக்கு போதிய கவனம் செலுத்தவில்லை. அதிலும் குறிப்பாக அமைச்சர் நிர்மல்குமார் திமுக அரசை குறை சொ்லும் வேலையை தவிர எந்த வேலையையும் பார்க்கவில்லை. இதன்காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் பவர் கட் தொடர்கிறது. அரசு விழாக்கள் , பட்டமளிப்பு விழாக்கள், இவ்வளவு ஏன் தலைமை செயலகத்தில் கூட பவர் கட் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலெக்சன் குமாராக மாறிவிட்டார். சோலார் பவர் திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில் அவர் ஊழல் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஒரு மெகாவாட் சோலார் திட்டத்திற்கு 15 லட்சம் ரூபாய் அவர் தரப்பில் பணம் கேட்பதாக சம்மந்தப்பட்ட நபர்கள் புகார் கூறுகின்றனர் .

இந்த விவகாரம் முதல்வர் விஜய்க்கு தெரியுமா? கரூருக்கு வந்த என்னைப்பற்றி குறைக்கூறி பாட்டுபாடினார். இனி நாங்கள் யூனிட்டுக்கு 35 ரூபாய் என பாட்டு பாடலாமா?.. CM Bro., நீங்க சொல்லுங்க Bro… தமிழக அரசின் செயல்படாத துறையாக மின்துறை உள்ளது. அதேபோல் பவர்கட் தொடர்பான புகார்களை கவனித்த மின்னகம் திட்டத்தை தவெக அரசு சரியாக கவனிக்க தவறிவிட்டது. ஒரு நாளைக்கு 37000 புகார்கள் மின்னத்திற்கு வருவதாக கூறுகின்றனர். என்று இவ்வாறு செந்திபாலாஜி கூறினார்.

error: Content is protected !!