Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக-வின் கடும் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் அடித்த பல்டி

திமுக-வின் கடும் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் அடித்த பல்டி

ஏழைகள் சாப்பிடும் ரேசன் அரிசியை பற்றி இப்படி கூறலாமா..? திமுக-வின் கடும் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் அடித்த பல்டி

ரேசன் அரிசியை சாப்பிடும் ஏழைகளை அவை முன்னவர் செங்கோட்டையன் கொச்சைப் படுத்தலாமா என திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

ரேசன் அரிசியை ஆடு, மாடு, கோழி போன்றவை தான் சாப்பிடுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“திமுக ஆட்சியின் ரேசன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டி உள்ளனர்.

எதிர்கட்சியாக இருந்த போது ரேசன் அரிசியை பற்றி செங்கோட்டையன் பேசியுள்ளாரா?

ஏழைகள் சாப்பிடும் ரேசன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவதாக கூறலாமா என்றார் எ.வ.வேலு.

இவ்வாறு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரேசன் அரிசி சாப்பிடுவதை நான் ஒன்றும் கொச்சைப்படுத்தவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

சில நேரங்களில் தரமில்லாத அரிசி நமக்கு வரும் போது அதை பயன்படுத்திய கிராம மக்கள் சிலர் அரிசி சாப்பிட ஏதுவாக இல்லை என்று சொல்லிய சில கருத்துக்கள் எங்களுக்கு கிடைத்தது.

இதுபோன்ற நிலை இருக்க கூடாது என்ற நோக்கத்தில் கூறினேன்.

error: Content is protected !!