அதில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முழுமையாக பொதுமக்களின் சேவைக்காக கட்டணமில்லா டயாலிசிஸ் மையம் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்தார். அதேபோல், பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஏரியை ஒட்டி விரிவான அளவில் ஒரு பூங்காவையும் திறந்து வைத்தார். தற்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடம், சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டடமாகும். இது சுமார் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த அரங்கில் 600 நபர்கள் அமர்ந்து திருமண விழாக்களைப் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 250 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும், 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் இந்த திருமண மாளிகையை வரும் 08.02.2026 அன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வார்டு-54, அம்மன் கோயில் தெருவில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், ஏழுகிணறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காய் கனி அங்காடியில் அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ல.நவீன், வெ.பரிமளம், ராஜேஸ்வரி ஶ்ரீதர், சுதா தீனதயாளன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை: துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-57, வால்டாக்ஸ் ரோடு, வ.உ.சி. சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.13.43 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதி மற்றும் வாகன நிறுத்த வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதலமைச்சர் பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், அதேபோல் வணிக சந்தைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சீரான மின்சாரம் என பல்வேறு வகையான திட்டங்களை தீட்டி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.