Skip to content

அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனின் மகன்  ரமேஷ். நேற்று இவர் தி. நகரில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் தனது மகனுடன்(அமைச்சரின் பேரன்)  இரவு காட்சி சினிமா பார்க்க சென்றார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது  அமைச்சரின் பேரன் அருகில் இருந்த 6 நபர்கள்(3பேர் பெண்கள்)கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தனர்.  அவர்களின் நடவடிக்கையை பார்த்தபோது அவர்கள் போதையில் இருந்திருக்கலாம் என  ரசிகர்கள் கருதினர். இதனால் யாரும் அவர்களை கண்டிக்கவில்லை.

இந்த நிலையில் அமைச்சரின் பேரன்  எழுந்து 6 பேரையும், சத்தம் போடாமல் படம் பாருங்கள் என கண்டித்து உள்ளார். இதனால்  அந்த 6 பேரும் அமைச்சரின் பேரனையும், அமைச்சரின் மகன்  ரமேசையும் சரமாரியாக தாக்கி விட்டு தியேட்டரில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.  படுகாயமடைந்த இருவரும்  சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!