ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69வது நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
