Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிதிலி புயல் எதிரொலி… 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாகஜ வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அதிகாலையில் வங்கதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஒடிசா மாநிலம் பாராதீப்பில்ப இருந்து 200 கி.மீ. தொலைவில் மிதிலி புயல் நிலை கொண்டுள்ளது. சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என

தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாகை , காரைக்கால்,கடலூர்,பாம்பன் புதுச்சேரி தூத்துக்குடி சென்னை எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் குறித்து ஏற்றப்பட்டுள்ளது ஏற்கனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மீன் வளத்துறை சார்பில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!