கோவையில் நடைபெற்ற தமுமுக – மமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஊராட்சி முதல் மாநகராட்சி வரை தங்களுக்குச் சாதகமான வார்டுகளை ஆய்வு செய்து களப்பணிகளைத் தொடங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடவும் அழைப்பு விடுத்துள்ள மமகவின் இந்த முடிவு மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட மமக முடிவு
