கனமழையால் கேரளம் மாநிலம் கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூஞ்சார் அருகே பய்யனித்தோட்டம், வண்டன்பிளாவு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் ஜானி என்பவரது மகன் ஜோசப் மற்றும் அவரது மனைவி ரெஜினா உயிரிழந்தனர். ஜானி அண்டை வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். அவர்களது மற்ற குழந்தைகள் வீட்டில் இல்லாததால் காயமின்றி தப்பினர். மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள நிலச்சரிவில் சிக்கி தாய்-மகன் பலி
