புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (39). இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில், பிளஸ் 2 படிக்கும் தனது மகனுடன் தண்டையார்பேட்டை வள்ளலார் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற பைக் மீது மகன் ஓட்டி சென்ற பைக் மோதி நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், மாரியம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அக்கம்பாக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர், வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி நடத்திய விசாரணையில், மாரியம்மாள் மகனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
