சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்குவது ஒரு நல்ல யோசனை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் (செப்.10) பேட்டியளித்த அவர், இதுகுறித்து தங்களது கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றார். தவெகவின் செல்வாக்கை எதிர்கொள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே பொது வேட்பாளரை நிறுத்துவது அரசியல் களத்தில் பலமான போட்டியாக அமையும் என்றும் அவர் கூறினார்.
