சென்னை ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஜிஎஸ்டி காவல் ஆய்வாளர் சௌரவ் கௌரவ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், செல்போனை ஹேக் செய்து புகைப்படங்கள் திருடியதாகவும், புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
