பாரத ரத்னா எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமானது, ஊட்டச்சத்து, எழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் உணவு தட்டுப்பாட்டை நீக்கியது மற்றும் அனைவருக்கும் சமமான ஊட்டச்சத்து கிடைத்ததில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கு மிகப்பெரியது. அவரின் 100-வது பிறந்தநாள் ஆக.7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் ஆக.7 முதல் 9-ம் தேதி வரை ‘நீடித்த பசுமை புரட்சி – இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
