சென்னை கழகத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் தன் இறுதிமூச்சு வரை உண்மையாக இருந்த களங்கமில்லாத திராவிடத் தீரர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் “அண்ணாவின் தம்பியாக அவர் ஆற்றிய உரைகளும் எழுதிய நூல்களும் நம் இயக்கத்தின் இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பயின்றாக வேண்டிய பாடப்புத்தகங்கள்.
ஓர் எளிய தஞ்சை டெல்டா மைந்தன் டெல்லி வரை சென்று தடம் பதித்தார். பின்பு தோகா வரை சென்று இந்தியா மட்டுமில்லாமல், உலகின் வளரும் நாடுகள் அனைத்துக்காகவும் வாதாடினார். எத்தனை உயரம் சென்றாலும் அந்தப் புகழை எல்லாம் கலைஞருக்கே காணிக்கையாக்கிய முரசொலிமாறன் அவர்களின் புகழ் வாழிய வாழியவே!” என தெரிவித்துள்ளார்.
