Skip to content

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த மர்ம நபர்கள் இளங்கோவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இளங்கோவனுக்கு 12 தையல்கள் போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இளங்கோவனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!