Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

காரைக்கால் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியான சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷினி என்பவர் நெருக்கமாக இருந்த வீடியோ,  மயிலாடுதுறையை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கில்லி பிரகாஷ் என்பவரிடம் சிக்கியது.

அந்த வீடியோவை வைத்து கில்லி பிரகாஷ் அதிகாரி  வெங்கடேசனை பிளாக் மெயில் செய்தாராம்.
இதனால்  கடந்த மாதம் 21ம் தேதி மயிலாடுதுறை போலீசாரால்  பிரகாஷ் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் கில்லி பிரகாஷ் அடைக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை காவல் நிலைய குற்றவியல் பட்டியலில் இடம்பெற்றுள்ள கில்லி பிரகாஷ் மீது கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் மாவட்ட காவல கண்காணிப்பாளர் மீனா பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கில்லி பிரகாசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இன்று அதிகாலை சிறையில் உள்ள ஜன்னலில் `தான் கட்டியிருந்த கைலியால் தூக்குபோட்டு கில்லி பிரகாஷ் தற்கொலை  செய்ய முயன்றாராம். உடனடியாக சிறைத்துறை போலீசார் கில்லி பிரகாஷ்சை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

கில்லி பிரகாசை பார்க்க அவரது தம்பி முரளியை போலீசார் அனுமதிக்கவில்லை. கில்லி பிரகாஷ் தற்கொலை முயற்சிக்கு போலீசார்தான் காரணம் என குற்றம்சாட்டி கூச்சலிட்டு தான் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை  முரளி தன் தலையில் ஊற்றி காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் முரளியின் தலையில் தண்ணீர் ஊற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!