Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்.. நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே மலைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால் அரியவகை செடி, கொடிகள் மூலிகை மரங்கள் எரிந்து நாசமானது.திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராகரம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனால் நேற்று மழைக்கு வந்த மர்மநபர்கள் அங்கிருந்த சருகுகளுக்கு தீவைத்துள்ளனர்.

இதில் மலையில் இருந்து அரிய வகை மூலிகை செடிகள், சிறிய வகை உயிரினங்கள் வனப்பகுதியில் பரவலாக தீப்பற்றி எரிந்து நாசமானது. மேலும் சிறிய மரங்களில் இருந்த குருவிக்கூடுகள் எரிந்து சாம்பல் ஆனது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து சட்ட விரோத செயலில் ஈடுபடும் பருவம் நபர்கள் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!