Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி வாலிபரிடம் ரூ. 38.58 லட்சம் மோசடி செய்த மர்ம பெண்…

திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவை சேர்ந்த 68 வயது முதியவரின் மகன் ராம் பிரகாஷ், இவர் சவூதி அரேபியாவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை கடந்த ஆண்டு திருமண தகவல் மையம் என்ற செயலி மூலம் மகன் ராம் பிரகாசுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த செயலி மூலம் சுபாஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தனது மகள் பார்கவி என்பவரின் செல்போன் எண்ணை ராம்பிரகாஷிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து ராம் பிரகாஷ் பார்கவியின் வாட்ஸ்-சப் எண்ணிற்கு அழைத்துள்ளார். அதில் பேசிய பார்கவி தான் ஜெர்மனியில் வசித்து வருவதாகவும், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அவர்கள் பேசி பழகி வந்த நிலையில் ராம் பிரகாசை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யதால் அதிக லாபம் கிடைக்கும் என பார்கவி அழைத்துள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய ராம் பிரகாஷ் பல்வேறு வங்கி கணக்குகளில் மூலம் பல்வேறு தவணைகளாக ரூபாய் 38 லட்சத்து 58 ஆயிரத்து 900-ஐ பார்கவி கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பார்கவி கூறியவாறு அவரது வங்கி கணக்கிற்க்கு எந்த ஒரு லாபமும் வரவில்லை, பணத்தையும் திருப்பித் . இது குறித்து பார்கவியை தொடர்பு கொண்ட போது, அவரது போன் எண் அணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராம்பிரகாஷ், இதுகுறித்து ஆன்லைனில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!