Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி தினம் என்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடைசி கட்ட நேரத்தில் விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர். அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு சிலர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அப்போது நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள குருவாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக மாட்டு வண்டியில்

ஏறி வித்யாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். கேஸ், பெட்ரோல் விலை ஏறிப்போச்சு! என்பதை தெரிவிக்கும் விதமாக வாஞ்சூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் மாட்டு வண்டியில் நாகை ஆட்சியர் அலுவலகத்திற்கு எரிவாயு உருளை, விறகு, மண்வெட்டி சைக்கிள் சகிதம் எடுத்து வந்தார். பின்னர் நாகை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் விஜயராகவன் இன்று தனது வேட்பு மனுவினை தேர்தல் நடத்து ஆலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸ் இடம் தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!