Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடைமுறையின் போது, பெங்களூரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடைமுறையின் போது, பெங்களூரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்பான நண்பர்களே , நான் உங்களுடன் ஒரு நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். SIR நடவடிக்கைக்கு பிறகு பெங்களூரு தொகுதியில் வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். இது நல்ல நகைச்சுவை இல்லையா? நான் இந்த தொகுதியில்தான் பிறந்தேன், வாழ்ந்தேன், எனது பள்ளிப்படிப்பு, கல்லூரி என அனைத்தையும் இங்குதான் படித்தேன். . மேலும் உங்கள் தகவலுக்காக இத்தொகுதியின் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். உங்களை தேர்ந்தெடுக்காத மக்களின் வாக்குரிமையை நீங்கள் பறிக்கலாம். ஆனால் உங்களை விழ்த்துவதற்கான எங்கள் சக்தியை தடுக்க முடியாது. சரி, இந்த நகைச்சுவை நன்றாகத்தான் இருக்கிறது. இனிதே ஆட்டம் ஆரம்பம்” எனக் கூறியுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில், நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!