Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செய்யாறு சிறுமி விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, பள்ளி மாணவி, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போதை கும்பலை சேர்ந்த மூவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒரு சிறுமி கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 15 வயது சிறுமி மீதான இந்தக் கொடூரமான தாக்குதல், இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை எழுப்பியது.

இது போன்ற ஈவிரக்கமற்ற கும்பலுக்கு எதிராக நடடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் பெரும் மீறலாகும். இந்த மிருகத்தனமான செயலை ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடி கடுமையான சட்ட நடவடிக்கையும் தேவை.பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்யவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தமிழக போலீசார் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!