தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படைத் தலைவர் ரியர் அட்மிரல் உப்பல் குண்டு, VSM மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் அரவிந்த கிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் விஜயை இன்று (அக்.8) மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு, கடற்படை நடவடிக்கைகள் மற்றும் மத்திய-மாநில ஒருங்கிணைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜயுடன் கடற்படை அதிகாரிகள் சந்திப்பு
