Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதியில் வரும் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திரபிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், வருகிற 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருமலையில் குவிந்தனர். இதே நிலை நீடித்ததால், வரும் 3 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த வரும் 6, 7, 8, 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்திவைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!