Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து   இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமான மாணவர் பங்கேற்றனர்.

எஸ்.கோபிநாத் தலைமை வகித்தார். கிளைத்தலைவர் கே.பரசுராமன்,  துணைத் தலைவர் ஏ.ஜேம்ஸ் , செயற்குழு உறுப்பினர் பா.ராகுல், மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்று, தேசிய தேர்வு முகமையை எதிர்த்து , கல்லூரி வாயிலில் கண்டன முழக்கமிட்டனர். கும்பகோணத்தில்  நடந்தது போல  மேலூர்  உள்பட பல நகரங்களில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!