Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் புதிய மாற்றம்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் புதிய மாற்றம்

அஜித்குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் ‘டேர் டெவில்’ படத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிக்கவிருந்த முக்கிய கதாபாத்திரத்தில், ‘மார்கோ’ படப் புகழ் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மோகன்லால் விலகியது மற்றும் உன்னி முகுந்தன் இணைவது குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது மோகன்லால் படத்தில் இடம்பெறவில்லை என்றும், அவருக்குப் பதிலாக ‘மார்கோ’ படப் புகழ் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லாலுக்காக பேசப்பட்ட அதே கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடந்தால், அஜித்குமார் – உன்னி முகுந்தன் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக இது அமையும்.

எனினும், மோகன்லால் படத்தில் இருந்து விலகியதாகவும், உன்னி முகுந்தன் இணைந்துள்ளதாகவும் வெளியாகும் தகவல்களுக்கு படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதி அளிக்கப்படவில்லை.

error: Content is protected !!