Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய வரி நிலுவைத் தொகை சமாதான திட்டம்… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர்  ஏ.எம். விக்கிரமராஜா, பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி. மணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டத்தை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன்  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, வணிகவரி ஆணையர் / முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர்  பா.ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!