Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் புதுமணத் தம்பதி சடலமாக மீட்பு!

கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் புதுமணத் தம்பதி சடலமாக மீட்பு!

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள தபதி ஆற்றில், கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் புதுமணத் தம்பதி ஷியாம் ஹரி பாட்டீல் மற்றும் சப்னா பாட்டீல் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், சில மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்துகொண்டனர். காணாமல் போனதாக உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய தேடுதலில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!