Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்த விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்த பிறகு என்ஐஏ தரப்பில் இருந்து  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வருகிறது. ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை  என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் கே.கே. நகர் பகுதியில் இந்த சோதனை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!