Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்.அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார.9 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது ஏற்கனவே விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் விஜய் சந்தித்தார் . இந்த சந்திப்பின்போது ரசிகர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக்கொண்டார். நிர்வாகிகளுக்கு பனையூரில் கமகம பிரியாணி ரெடியாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!