Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிவாரணத் தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வந்த மக்கள் தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்காக அளித்தனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே பிரம்மன்பேட்டை, அடஞ்சூர் சேர்ந்த விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் பிரம்மன் பேட்டை மற்றும் அடஞ்சூர் பகுதிகளில் ஆழ்துளை கிணறு வசதி இல்லை. இதனால் இப்பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர் .சாகுபடி செய்ய முடியாமல் இப்போது சேர்ந்த விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளனர். எனவே பிரம்மன்பேட்டை மற்றும் அடஞ்சூர்| பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!