Skip to content
Home » நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

  • by Senthil

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தன. மேலும், பாராளுமன்ற விதி 267-ன்படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என  வலியுறுத்தி வருகிறார்கள். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

இதன் மீதான விவாதம் நேற்றுமுன்தினம் தொடங்கிய நிலையில், நேற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. உரையாற்றினார். இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.

இந்நிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று  மாலை பதில் அளித்து பேசுகிறார். தன் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!