திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குடிநீர் பிரச்சனைக்காக போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் தப்பி செல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
குழந்தைகள், பெண்கள், மக்கள் பிரதிநிதிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையை தவெக ஆட்சி உருவாக்கியுள்ளது. இந்த கொலைக்கு பின்னால் உள்ள காரணங்களை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
