தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 21-ந் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வர உள்ளது.
பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் ரத்து
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட அனுமதி கேட்டிருந்தார், இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுவிட்ட நிலையிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரம் பலமுறை இதேபோல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை 2 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்த நிலையில், ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்காததால், தற்போது பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
