Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டி….. வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்து விட்டதால், அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள் இன்னம் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில்  நாளை விக்கிரவாண்டியில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமாக செயல்படும். அங்கு மாவட்ட  வினியோக அதிகாரி சந்திரசேகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இவர் தான் தெர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  21ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். 24ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.  26ம் தேதி  வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.

நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகம்  தயார் நிலையில் உள்ளது. இன்றே அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!