சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரையும் விட்டுவிட கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களில் காவல் ஆணையருடன் 2 முறை நேரடியாக ஆலோசனை நடத்திய அவர், வழக்கில் தீவிர விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஏற்கனவே இவ்வழக்கில் வீரமணிக்கு உதவியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
