அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி முழுமையாக முடக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் 30% எரிபொருள் விநியோகத்திற்கு பயன்படும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்துள்ள ஈரான், அங்கு விதிமுறைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு அபராதம், சிறைபிடித்தல் மற்றும் பறிமுதல் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
