2 கொலை வழக்குகள் உள்பட 37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுதாகர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13ம் தேதி இரவு புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
