Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழைய அக்கவுண்ட் நம்பர், புதிய வங்கி: ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்

செல்போன் எண்ணை மாற்றாமல், செல்போன் இணைப்பை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதேபோல், வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாறிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது.

இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2028-ம் ஆண்டுக்கான பேமெண்ட் தொலைநோக்கு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பேமெண்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் எனும் புதிய கட்டமைப்பை உருவாக்குவதன் வாயிலாக, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு சேவைகளை மாற்றும்போது உருவாகும் மிகப்பெரிய பிரச்சினைகளை களைய திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு வங்கி கணக்கை மற்றொரு வங்கிக்கு மாற்றும்போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சம்பளம், மியூச்சுவல் பண்டு, கடன் தவணை மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியம் போன்ற அனைத்து விவரங்களையும் புதிய வங்கியில் ஒவ்வொன்றாக மாற்ற வேண்டிய சிரமம் உள்ளது. இந்த தடையை நீக்கி, வாடிக்கையாளர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சிறந்த வட்டி விகிதம் அல்லது மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு எந்தவித தடையுமின்றி மாறுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும். இதன் வாயிலாக வங்கி துறையில் ஆரோக்கியமான போட்டி உருவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!