பழைய ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாற்றிக்கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு திரும்பப்பெற அறிவிக்கப்பட்ட இந்நோட்டுகளில் 98.47 சதவீதம் வரை வங்கிகளுக்கு வந்துள்ள நிலையில், இன்னும் ரூ.5,451 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருப்போர் சென்னை பாரிமுனை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கி தொகையை வங்கிக் கணக்கில் பெறலாம்.
பழைய ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி
