தமிழக முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததை கண்டித்து திமுகவினர் காட்டூர் ஆயில் மில்பகுதியில் உள்ள கலைஞர் சிலை முன்பு தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
முன்னாள் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான

அன்பில் மகேஷ் கொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் செய்வதாக கூறி தவெக அரசு நேற்று அவரை கைது செய்தது
இதனை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பகுதியில் உள்ள கலைஞரின் உருவ சிலை முன்பு திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன் தலைமையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
பகுதி செயலாளர்கள் நீலமேகம் , சிவகுமார், தர்மராஜ், ஏ எம் ஜி விஜயகுமார், திருவெறும் பூர் ஒன்றிய செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி, கங்காதரன்,கூத்தை பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதோடு தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய பகுதி நகர மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
