அதிமுக கோவை மாவட்ட எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவிகளை துறந்து தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால் அதிமுகவில் பிளவு உறுதி என பேசப்பட்டது. கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவர் எஸ்.பி.வேலுமணி, வன்னியர் சமூகத்தில் செல்வாக்கு மிக்க சி.வி.சண்முகம் ஆகியோரும் அதிருப்தியில் இருப்பதாகவும், தவெக பக்கம் தாவலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால் திடீரென வேலுமணி, “பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சி பெற வேண்டும்” என்று பேசினார். சி.வி.சண்முகமும் “அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். அதிமுகவில் திடீர் திருப்பமாக கடந்த சில மாதங்களாக கூட்டு தலைமை வேண்டும் என குரல் கொடுத்து வந்த முக்கிய தலைவர்கள் திடீரென பின்வாங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக கோவை மாவட்ட எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை என கூறுகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
